Map Graph

குதுப் நினைவுச்சின்னங்கள்

கோபுரம்

குதுப் மினார், இந்தியாவில், தில்லியில் 72.5 மீட்டர்கள் உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குத்புத்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரூசு சா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகவும் புகழ் பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.

Read article